சவூதி தி.மு.க சார்பாக பாராட்டு விழா
நிர்வாகி
0
கடந்த 23.9.21 அன்று சவூதி விடுதலை தினத்தை முன்னிட்டு சவூதி தி.மு.க, சார்பாக நடத்தபட்ட இலவச மருத்துவ முகாமில் அயராது பாடுபட்டவர்களுக்கு பாராட்டு விழா இன்று (15.10.21) ரியாத் டிமோரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது , ரியாத் தி.மு.க தலைவர் டாக்டர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை தூதரகத்தின் துணை தூதுவர் மேதகு. பாஜில் அஹமது, இந்திய தூதரகத்தின் பெண்கள் மேம்பாட்டு அணையர் திருமதி. சுவப்னா மகேஷ், சவூதி காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் லால்பேட்டை முஹம்மது நாசர், சமுக சேவகர் கஜ்ஜாலி, த.மு.மு.க ரியாத் தலைவர் நூர் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த முகாம் சிறப்பாக நடைபெற உழைத்த அல் ரயான் மருத்துவமனை, சவூதி தி.மு.க, இந்தியன் வெல்பேர் பாரம்( தமுமுக), வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நல சங்கம், நெஸ்டோ சூப்பர் மார்க்கெட் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கபட்டது.
Tags: உலக செய்திகள்