Breaking News

வடக்கு கொளக்குடி முஸ்லிம்ஜமாஅத் போராட்டம் அறிவிப்பு ..!

நிர்வாகி
0
நிதி ஒதுக்கிடுவீர்..! மக்களை மனநிறைவோடு சாலையில் நடக்கச் செய்வீர்..!
மா. கொளக்குடி ஊராட்சி மன்ற பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு கொளக்குடி கிராமத்தில் இருக்கும் ஜாக்கிர் உசேன் நகரில் அனைத்து தெருக்களின் ரோடுகளும் சரியில்லாமல் சீர்கெட்டு கிடைப்பதினால் பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு மிகவும் சிமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். மற்றும் கர்ப்பிணி பெண்கள் ,வயதுமுதிர்ந்தவர்கள், நோயாளிகள் அனைவரும் மிகவும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களாகவும், வாய்மொழியாகவும் தெரியபடுத்தி கொண்டே இருக்கிறோம். ஆனால் இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் 29/10 / 2021 வெள்ளிக்கிழமை இன்று ஜும் ஆ தொழுகைக்குப் பிறகு ஜாக்கிர் உசேன் நகர் நடைப்பாலம் அருகில் சிதம்பரம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெறும். ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு நம்முடைய கோரிக்கையை முன்வைக்க வாருங்கள் என்று அழைக்கின்றோம்.
இப்படிக்கு
வடக்கு கொளக்குடி முஸ்லிம்ஜமாஅத் மற்றும் ஊர் பொதுமக்கள்

Tags: செய்திகள்

Share this