Breaking News

லால்பேட்டையில் நடைபெற்ற "தஃப்ஸீர் அஷ்ஷஃராவி" விளக்க நூல் வெளியீட்டு விழா..!

நிர்வாகி
0
வரலாற்று சிறப்பிற்குரிய லால்பேட்டையில் பிறந்து சரித்திரப் பிரசித்திப் பெற்ற ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் கல்வி பயின்று சவூதி அரேபியாவில் பணியாற்றி சமுதாய அமைப்புகளில் இணைந்து சேவையாற்றி பேச்சாளராகவும் - எழுத்தாளராகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டு சமுதாயப் பணிகளாற்றி வரும் மவ்லவி எம்.ஒய். முஹம்மது அன்சாரி மன்பஈ ஹள்ரத் அவர்களால் எழுதப்பட்ட "தஃப்ஸீர் அஷ்ஷஃராவி" என்னும் திருக்குர்ஆன் (சூரத்துல் பகரா) விளக்க நூல் வெளியீட்டு விழா இன்று (19/10/21 செவ்வாய்க்கிழமை) கொத்தவால் தெரு JMA மண்டபத்தில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
மாவட்ட அரசு காஜி மவ்லானா ஏ. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையிலும் மவ்லவி எம்.ஒய். முஹம்மது அன்சாரி மன்பஈ ஹள்ரத் அவர்கள் வரவேற்புரையாற்றினார் .
இவ்விழாவில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லானா பி.ஏ. காஜா மொய்தீன் ஹள்ரத், , மவ்லானா முஹ்யித்தீன் மதனி ஹள்ரத், அய்யம்பேட்டை அஞ்சுமன் அறிவகம் டி.எம். ஜஃபருல்லாஹ், நீடூர் ரஃபியுத்தீன்,எஸ்.டி. கூரியர் நிர்வாக இயக்குநர் முனைவர் கே. அன்சாரி , புரஃபஷனல் கூரியர் முதன்மை அலுவலர் கனி, ஆயங்குடி மவ்லவி பி.ஏ. ஜாஃபர் அலி ஹள்ரத், சிதம்பரம் பைசல் மஹால் உரிமையாளர் யாஸீன், கே.ஏ. அமானுல்லாஹ், மவ்லவி எஸ்.ஏ. சைஃபுல்லாஹ் ஹள்ரத், மவ்லவி வி.ஆர். அப்துஸ் ஸமத் ஹள்ரத் உள்ளிட்ட சமுதாய பிரமுகர்கள், ஆலிம் பெருந்தகைகள், ஜமாஅத்தார்கள், பெரியோர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றுள்ளனர். மவ்லவி எம்.ஒய். அப்துல் அலீம் சித்தீக் மன்பஈ ஹள்ரத் நன்றியுரையாற்றினார் .

Tags: லால்பேட்டை

Share this