Breaking News

லால்பேட்டை ஷைகுல்மில்லத் இளைஞர் மன்றம் & சீரத் கமிட்டி மீலாதுநபி விழாவின் ஆரம்பமாக மெளலானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் மஃபிரத்திற்க்கு துஆ

நிர்வாகி
0
ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் & சீரத் கமிட்டி சார்பில் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வாளாகத்தில் 84 - வது வருடமாக நடைப்பெற்று வரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின 12- நாள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி 07/10/2021 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி #முதல்வர் மெளலானா காஜி நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமையில் நடைப்பெற்றது.
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அப்துர் ரஹ்மான் மற்றும் ஜமாஅத்தார்கள், சீரத் கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். ஜாமிஆவின் மாணவர் ஹாபிழ் முஹம்மது உஸாமா கிராஅத் ஓதினார். டி.ஏ.அபுசுஹூது வரவேற்றுப் பேசினார்
ஆரம்பமாக மெளலானா தளபதி ஷபீகுர்ரஹ்மான் ஹஜ்ரத் மஃபிரத்திற்க்கு ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி *முதல்வர் மெளலானா காஜி நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் துஆ செய்தார்
ஜெ.எம்.ஏ. அரபிக்கல்லூரி துணை முதல்வர் மொளலான சைபுல்லா ஹஜ்ரத், பேராசிரியர்கள் மெளலவி வி.ஆர். அப்துஸ் ஸமது ஹஜ்ரத், மெளலவி முஹம்மது அலி ஹஜ்ரத், மெளலவி முஹம்மது காஸிம் ஹஜ்ரத், மெளலவி சலாஹுத்தீன் ஹஜ்ரத், மெளலவி மாஸுமுல்லா ஹஜ்ரத், ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மெளலான நூருல்லா ஹஜ்ரத் ஆகியோர் பங்கேற்று மீலாது சொற்பொழிவு நிகழ்த்தினர் நாகூர் கனி இஸ்லாமிய கீதம் பாடினார்.

Tags: லால்பேட்டை

Share this