Breaking News

ரியாத் அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாத்தின் சார்பாக AEM. அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் மஹ்fபிரத்துக்காக துஆ

நிர்வாகி
0
கடந்த (26-11-2021) வெள்ளி இரவு இஷா தொழுகைக்கு பிறகு 08:00 மணியளவில் நமது ஊர் ஜாமிஆ வின் மூத்த பேராசிரியர் மர்ஹீம் அல்ஹாஜ் AEM. அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களின் மஹ்fபிரத்துக்காக ரியாத் அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாத்தின் சார்பாக முஹம்மது நாசர் அவர்களின் பத்தாஹ் இல்லத்தில் யாசீன் ஓதி துஆ செய்யப்பட்ட து இதில் ஜமாஅத்தின் நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இதன் துவக்கமாக ஹாபிழ் A. யாசர் அவர்கள் யாசீன் ஓதினார்கள், ஹஜ்ரத் அவர்களின் சிறப்புகளை பற்றி ஜமாஅத் தலைவர் முஹம்மது நாசர் அவர்களும், மவ்லவி A. அமானுல்லாஹ் அவர்களும் பேசினார்கள். இறுதியாக துஆ செய்து கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Tags: லால்பேட்டை

Share this