மவ்லவி A.E.M.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத் ஜனாஸா நிகழ்வில் கலந்து துஆ செய்த அனைவருக்கும் JMA சார்பில் நன்றி!
நிர்வாகி
0
إنا لله و انا اليه راجعون
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி நம்மை விட்டு பிரிந்த ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் மூத்த பேராசிரியர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ்
A.E.M. அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களின் ஜனாஸா நிகழ்வுகளில் கலந்து து ஆ செய்த
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும்
துணை நிர்வாகிகள் அனைத்து ஆலிம்கள், அனைத்து அரபுக் கல்லூரியின் முதல்வர்கள்,
பேராசிரியர்கள், மாணவர்கள், அனைவருக்கும்
தன்னுடைய அனைத்து முக்கிய நிகழ்வுகளையும்
ஒதுக்கி வைத்து விட்டு ஜனாஸா நிகழ்வுகளில் கலந்து கொண்டக அனைத்து சமூதாய
இயக்கங்களின் தேசிய, மாநில, தலைமை நிர்வாகிகள், துணை நிர்வாகிகள் அனைவருக்கும்
லால்பேட்டை பாரம்பரியத்தை கட்டி காக்கும் விதமாக ஹள்ரத் அவர்களின் நல்லடக்க
நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்திய ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் நிர்வாக சபை தலைவர்,
செயளாலர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும்,
லால்பேட்டை முஸ்லிம்
ஜமாஅத்தின் அறிவிப்பை ஏற்று ஹள்ரத் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக
அனைத்து கடைகளையும் அடைத்து ஒத்துழைப்பு தந்த வியாபாரிகள் அனைவருக்கும்,
லால்பேட்டை
நகர மஸ்ஜித்களின் முத்தவல்லிகள், உலமாக்கள் மற்றும் ஜமாஅத் தார்கள் அனைவருக்கும்,
தூர தூர ஊர்களிலிருந்தும் சுற்றுப்புற வருகைதந்த ஜமாஅதார்கள் அனைவருக்கும் சட்டமன்ற
உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கும் நமதூரில் நடக்க இருந்த
தங்களின் முக்கிய நிகழ்வை ஓத்தி வைத்த சமூதாய அமைப்பிற்கும்
ஜாமிஆ மன்பஉல்
அன்வாரின் சார்பாக நன்றிகளை தெரிவித்து து ஆ செய்கிறோம் جزاكم الله خيرا
இப்படிக்கு