தமிழகமுதல்வர் இஸ்லாமிய மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டுகிறேன்.!!! தேசிய லீக் எம்பஷீர்அஹமது கோரிக்கை
நிர்வாகி
0
இந்திய தேசிய லீக் மாநில தலைவர் அல்ஹாஜ் எம்பஷீர்அஹமது அவர்கள் கோரிக்கை
22 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்று டாக்டர் கலைஞர் தங்களுடைய தந்தை யார் காலத்திலிருந்து நான் கோரிக்கை வைத்து வருகிறேன்
பலமுறை கலைஞர் அவர்களையும் ஏன் உங்களையும் கூட எண்ணிலடங்காத முறை சந்தித்து இந்தக் கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வந்து இருக்கிறேன்
தங்களின் அரசு பொறுப்பேற்றவுடன் பல வருடங்களாக சிறையில் இருக்கும் நளினி பேரறிவாளன் உட்பட அனைத்து இஸ்லாமிய சிறைவாசிகளையும் தாங்கள் விடுதலை செய்வீர்கள் என்ற ஒரு எதிர்பார்ப்போடு காத்திருந்த சூழ்நிலையில் இன்றைய தினம் தமிழக அரசின் அரசாணை (G.O.No.488 dated 15.11.2021) வந்திருக்கிறது
இந்த அரசாணை மூலம் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது
பல வருடங்களாக இவர்கள் விடுதலைக்காக பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருவதை தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்
மீண்டும் ஒருமுறை நீங்கள் இவர்களில் விடுதலைக்குசெவி சாய்த்து விடுதலை செய்வதற்கு வழிவகை செய்திட வேண்டுமாய் உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்
இவண் : எம்.பஷீர் அஹமது
மாநில தலைவர்
இந்திய தேசிய லீக்
Tags: செய்திகள்