Breaking News

லால்பேட்டையில் SDPI நடத்திய ஆர்ப்பாட்டம்!

நிர்வாகி
0



இன்று (19-12-2021) கடலூர் கிழக்கு மாவட்டம்  லால்பேட்டையில் SDPI கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் K.S.ஷான் அவர்களின் படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி தலைவர் அஹமதுல்லா அவர்கள் தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் மக்பூல் அஹமது, மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல்லா, காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் ஜபருல்லா, நகர தலைவர்கள் நஜிமுதீன், முஜிபுர்ரஹ்மான், ஃபைசல் மற்றும் தொகுதி நகர கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். SDPI கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட துணை தலைவர் சர்புதீன் ஷரீப் அவர்களும் PFI கடலூர் மாவட்ட தலைவர் ஃபயாஸ் அஹமது மன்பயீ அவர்களும் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர். 







Tags: லால்பேட்டை

Share this