மமக,திமுக கூட்டணிக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் வாழ்த்து செய்தி..!
தமிழ்நாட்டின் உள்ளாட்சி தேர்தல் மிக சிறப்பாக நடைப்பெற்று முடிவுகளும் வந்துள்ளது. தி மு க மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைமையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவைகளில் பெறுவாரியான பகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.
லால்பேட்டை பேரூராட்சியில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தி மு க வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் எங்கள் ஜமாஅத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம். மேலும் வெற்றிப்பெற்ற வேட்பாளர்கள் சிறப்பான முறையில் மன்ற தலைவர் தேர்வு செய்து சிறந்த நிர்வாகத்தை அமைத்து நமது ஊரை சிறப்பான முறையில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பணி செய்து மக்களுக்கு தேவையான அரசு சார்ந்த உதவிகள், தெருக்களில் தரமான தார்சாலை வசதி அமைத்தல், மின் விளக்கு, வாய்க்கால் தூர் வாரி அதை பராமரித்தல், வடிகால் சீறமைத்து அதை சரியான முறையில் பராமரித்தல், ஊரின் பாதுகாப்பிற்கு தெருக்களில் சிசிடிவி கண்கானிப்பு கேமரா அமைத்தல், நமது ஊரில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்துதல் போன்ற விசயங்களை முன்னெடுத்து ஊரின் வளர்ச்சிக்காக பாடுபடவும் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களையும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙனம்
அபுதாபி லால்பட்டை ஜமாஅத்
Tags: லால்பேட்டை