லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு நிறுவன நாள் விழாவையொட்டி 10/3/2022 வியாழக்கிழமை அன்று லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தாய்ச்சபை கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான்,நகர பொருளாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி, மாவட்ட பிரதிநிதிகள் பி.எம்.மஸுத் அஹ்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர கவுரவ ஆலோசகரும், லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியுமான ஹாஜி வி.ஏ.அப்துர் ரஹ்மான் அவர்கள் நட்சத்திரம் பதிந்த பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைத்தார்.
நகர துணை தலைவர் மவ்லவி எம்.முஹம்மது அய்யூப் அவர்கள் துஆ செய்தார்கள்.
நகர கவுரவ ஆலோசகர் எம்.ஹெச்.முஹிப்புல்லா, நகர துணை தலைவர்கள் எஸ்.எம்.முஹமம்து ஹாமித், கே.எஸ்.சபியுல்லா, நகர துணை செயலாளர்கள் எம்.எஸ்.முஹமம்து சித்தீக்,எஸ்.ஏ.அபுசுஹுத், ஜாக்கீர் ஹுசைன் பிரைமரி தலைவர் ஜாக்கிர், மாவட்ட பிரதிநிதிகள் ஏ.உபைதுர் ரஹ்மான், எம்.முஹமம்து முபாரக், ஏ.கே.முஹமம்து அஸ்கர், முஹம்மது ஹசன், தகவல் தொழில்நுட்ப அணி இம்தியாஸ், நகர இளைஞர் அணி செயலாளர் ஹிதாயத்துல்லா, மாணவரணி தலைவர் அசாருதீன், செயலாளர் முஸாஹிர்,துணை தலைவர் நிஜாம் மற்றும் பிரமுகர்கள் சாதுல்லா, முஹம்மது ஆசிக், முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை