Breaking News

அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..!

நிர்வாகி
0

 


அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு மூன்றாவது முறையாக மற்றும் இந்த வருடத்திற்கான புதிய கார்டு புதுப்பித்தல் முறையில்  சுமார் 700 குடும்பங்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி:-


அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் *Privilege Fast Service card* மூன்றாம்  கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு  இன்று வழங்கப்பட்டது 

 

இறைவனின் நாட்டப்படி மூன்றாம்  கட்டமான விழா நிகழ்வு  நாள் *06/03/2022* ஞாயிற்றுக்கிழமை  கார்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் காலை 9 முதல் மாலை 5 வரை எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள மூன்றாவது கீழ்தளத்தில்  மிக சிறப்பானமுறையில் நடைபெற்றது 



இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் அவர்களின் ஆலோசனைப்படி அய்மான் சங்கத்தின் பைத்துல்மால் தலைவர் அதிரை சாகுல் ஹமீது ஹாஜியார், அய்மான் சங்க துணை தலைவர் மதுக்கூர் ஒய்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் மற்றும்  கௌரவ ஆலோசகர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்கள்


மேலும் இன்நிகழ்ச்சியில்  பைத்துல் மால் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன்,துணைப் பொருளாளர்

பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா,நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், மக்கள் தொடர்புச் செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன்,நிர்வாக செயற்குழு உறுப்பினர், பாவட்டக்குடி நவ்ஷாத் அலி, அம்பகரத்தூர் முஹம்மது கைசர்  மற்றும் கீழக்கரை ஏ.ஹெச்.சயீத் முஹம்மது பாசில் அவர்களும் உடன் இருந்தார்கள்.


இதேபோன்று அய்மான் சங்க நிர்வாகிகளுக்கு இரண்டு கட்டமாக  550 குடும்பங்களுக்கு 04/06/2021 மற்றும் 06/08/2021 அன்று LLH ஹாஸ்பிடல் நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


அய்மான் சங்கம்.

அபுதாபி

Tags: உலக செய்திகள்

Share this