சிங்கராவீதி தொண்டு அறக்கட்டளைக்கு வாரி வழங்குங்கள் !!
சிங்கராவீதி தொண்டு அறக்கட்டளைக்கு வாரி வழங்குங்கள் !!
ஸகாத் சமூகரீதியாக பல இலக்குகளைக் கொண்ட ஒரு சமூகக் கடமையாகும். ஆங்காங்கே சிலர் தனிப்பட்ட முறையில் இதனை நிறைவேற்றுவதனால் இவ்விலக்குகள் அடையப்பெறாதவாரு ஸகாத்தின் நடைமுறை யதார்த்தத்திற்கு முரணானதாகவும் அமைந்துவிடுகிறது. ஸகாத் கூட்டாக சேகரித்து விநியோகிக்ப்படக்கூடிய கடமை என்பதுவே அடிப்படையாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் மற்றும் கலீபாக்கள் கால நடைமுறையாகவும் இது அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தமது காலத்தில் இப்னு மஸ்ஊத் (ரழி) அம்ருப்னு ஆஸ் (ரழி) இப்னு லுதைபா (ரழி) போன்ற பலரையும் பல பிரதேசங்களுக்கு ஸகாத் சேகரிப்புக்காக அனுப்பியுள்ளார்கள்.
ஸகாத் கூட்டாக நிறைவேற்றுவதாலேயே தகுதியான அனைவரிடமிருந்தும் அது பெறப்பட்டு அருகதையுடைய சகலருக்கும் முறையாக வழங்கப்படும் நிலை தோன்றும். மேலும் ஏழைகள் சுய கௌரவத்தோடு ஸகாத்தைப் பெறவும் சமூகரீதியான சேவைகளுக்கு ஸகாத் பயன்படுத்தப்படவும் இது வழிவகுக்கின்றது.
எனவே சிங்காரவீதி தொண்டு அறகட்டைளுக்கு உங்கள் ஜகாத்துக்களையும்,பித்ரியாக்களையும் வாரி வழங்குங்கள் .
இங்கனம்
சிங்காரவீதி தொண்டு அறக்கட்டளை
லால்பேட்டை.
Tags: லால்பேட்டை