துபாயில் லால்பேட்டை அமீரக தமுமுக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி..!
நிர்வாகி
0
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் லால்பேட்டை அமீரக தமுமுக இந்தியர் நல்வாழ்வு பேரவையின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஊடகவியாளர் தோழர் செந்தில் வேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.
லால்பேட்டை சகோதரர்களால் ஒருங்கிணைப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் இந்தியர் நல்வாழ்வு பேரவையின் ஐக்கிய அரபு அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி, துணைத் தலைவர் பரமக்குடி ஏ.எஸ்.இப்ராஹிம், அமீரக துணைச் செயலாளர் பொறியாளர் கஜ்ஜாலி, மகளிர் அணி செயலாளர் டாக்டர்.பஜிலா ஆசாத், துபாய் மண்டல நிர்வாகிகள், லால்பேட்டை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.