Breaking News

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி

நிர்வாகி
0

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


வல்ல ரஹ்மானின் கிருபையால் 19.04.2022 செவ்வாய் மாலை பாவாபாரஹா ஹோட்டல் அபுதாபி டூரிஸ்ட் கிளப் ஏரியாவில் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி சீரோடும் சிறப்போடும் நடைப்பெற்றது. 


நிகழ்ச்சியில் துவக்கமாக மௌலவி ஹசன் மன்பஈ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள் வரவேற்பு மற்றும் நன்றியுரையை ஜமாஅத்தின் பொருளாளர் M I நூருல் அமீன் அவர்கள் வழங்கினார்கள். சிறப்பு பயானை நமது ஜமாத்தின் உறுப்பினர் சகோதரர் முஜம்மில் மன்பஈ அவர்கள் வழங்கினார்கள். தலைமை உரை மற்றும் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து ஜமாஅத்தின் தலைவர் C M அப்துல் மாலிக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். சிறப்பு பயான் மற்றும் துவாவை காயல் ஹூசைன் மக்கி மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் வழங்கி நிகழ்ச்சி துவாவோடு இனிதே முடிவுற்றது. 


நம்முடைய அழைப்பை ஏற்று விழாவிற்கு வருகை புரிந்த லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள் மற்றும் ஜமாஅத்தின் அங்கத்தினர்கள் அனைவர்களுக்கும் மற்றும் இஃப்தாருக்கு பொருள் உதவி தந்து தங்களுடைய பங்களிப்பை நல்கிய நல் உள்ளங்களுக்கு ஜமாஅத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். 










Tags: லால்பேட்டை

Share this