Breaking News

ஜுலை 2 லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆம்புலன்ஸ் அப்பணிப்பு விழா..!

நிர்வாகி
0

 ஜுலை 2-ல் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு


லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவசர ஆலோசனைக் கூட்டம் நகர அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நகர தலைவர் அப்துல் வாஜித் தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்தில் ஆம்புலன்ஸ் இறுதிக்கட்ட பணியை அடைந்திருப்பதையொட்டி, மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க குழு அமைக்கப்பட்டது.


P.M.மஸ்ஊத் அஹமது,

K.S.சபியுல்லாஹ், M.அனீசுர் ரஹ்மான்,

ஹாமீது,

S.M.அப்துல் வாஜிது,

மவ்லானா அமீனுல் ஹுசைன் மன்பஈ,

முஹம்மது சித்தீக்,

இஸ்மத்துல்லாஹ்,

A.முஹம்மது தைய்யூப் முஹிப்பி,

அப்துல் ரஹ்மான் ரப்பானி,

M.H.முஹம்மது ஆசிப், ஜாக்கிர் ஹுஸைன் நகர தலைவர் 

ஜாகிர் ஹுசைன்,

ஹாமீம் ஃபைஜி

ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.


தொடர்ந்து ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவை இன்ஷா அல்லாஹ் 2022 ஜூலை 2 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடத்துவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.


நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் தென்காசி ஹாஜி எம்.எஸ்.துராப்ஷா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து துஆ செய்யப்பட்டது.


மெளலவி இஸ்மத்துல்லாஹ் மன்பஈ துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.



Tags: லால்பேட்டை

Share this