Breaking News

கண்ணியமிகு காயிதே மில்லத் ரஹ் 127 ஆவது பிறந்த நாள் விழா ! நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

நிர்வாகி
0

  



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் ரஹ் அவர்களின் 127 ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை வாலாஜா மஸ்ஜிதிலுள்ள அவர்களது நினைவிடத்தில்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின், 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பாளர் லால்பேட்டை மௌலவி ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி பிரார்த்தனை செய்தார்.


மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் Ex.MLA., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான்,  மாநில முதன்மை துணை தலைவர் வக்ஃப் வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில துணை தலைவர் நவாஸ் கனி எம்.பி.,  அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்ரமணியன், ஆவடி நாசர், திருப்பூர் அல்தாப் ஹுசைன், ஜெ. எம். ஹாரூன் Ex.M.P., தயாநிதி மாறன் M.P., சென்னை  மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: சமுதாய செய்திகள்

Share this