அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 16-வது பொதுக்குழு கூட்டம்
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 16-வது பொதுக்குழு கூட்டம் 26.06.2022 ஞாயிறு மாலை 5:00 மணிக்கு இந்தியன் இஸ்லாமிக் சென்டர் மினி ஹாலில் ஜமாஅத்தின் தலைவர் C M அப்துல் மாலிக் அவர்களின் தலைமையிலும் ஜமாஅத்தின் முன்னால் தலைவர்கள் A R இஸ்மத்துல்லாஹ், M சுஐபுத்தீன் மற்றும் J யாசிர் அரபாத் அலி இவர்களின் முன்னிலையில் சீறோடும் சிறப்போடும் நடைப்பெற்றது.
தொடக்கமாக கிராஅத்தினை ஜமாஅத்தின் உறுப்பினர் M முஜம்மில் மன்பஈ ஓதினார். வரவேற்புரை, ஆண்டரிக்கை மற்றும் தணிக்கை அறிக்கையை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் N முஹம்மது சித்திக் வழங்கினார். வரவு செலவு மற்றும் நன்றியுரை ஜமாஅத்தின் பொருளாளர் M I நூருல் அமின் வழங்கினார்.
ஜமாஅத்தின் 2022-2024 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாஅத்தின் முன்னால் தலைவர்கள் முன்னிலையில் நடைப்பெற்று அதை ஜமாஅத்தின் அங்கத்தினர்கள் அனைவர்களாலும் முன் மொழியப்பட்டு புதிய நிர்வாகிள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
தலைவர்:
ஹாஜி V A அஹமது
துணைத்தலைவர்கள்:
H M பலுலுர் ரஹ்மான்
S M முஹம்மது மாரூப்
பொதுச்செயலாளர்:
A முஹம்மது ரிலா
பொருளாளர்: L அஹமது ஜாபிர்
துணைப்பொருளாளர்:
M R சல்மான் பாரிஸ்
தணிக்கையாளர் :
S T ஷேக் அஹமது
மக்கள் தொடர்பு செயலாளர்:
A சிராஜூல் அமீன்
ஆகியோர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்
இறுதியாக துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது.
Tags: லால்பேட்டை