சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கத்தின் சார்பாக சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முஸ்லிம்கள் மீதான புல்டோசர் பயங்கரவாதத்தை நிறுத்த வலியுறுத்தி சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கத்தின் சார்பாக சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜலீல் தலைமை தாங்கினார் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் முகமது கவுஸ் முன்னிலை வகித்தார்.
இவ் ஆர்ப்பாட்டத்தில்...
திரு சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், ஃபாதர் ஜெகத் கஸ்பர், முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு.வன்னிஅரசு, செய்தி தொடர்பாளர் திரு.விக்கிரமன், பேராசிரியர் சுந்தரவள்ளி Phd, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், எழுத்தாளர் பிரியா மனோகரன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் பேச்சாளர் குணாஜீ, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் ஆவடி நாகராஜன் உள்ளிட்ட சமூக அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
கூட்டமைப்பின் சார்பாக நடைபெற இருக்கக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெறும் கும்பல் படுகொலைகள் உள்ளிட்ட அரச பயங்கரவாத செயல்களுக்கு எதிராக முஸ்லிம் உரிமை பாதுகாப்பு சட்டத்தை MRP Act (Muslim rights Protection Act) கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் யிடம் வழங்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒன்றிய மோடி அரசு மற்றும் ஜார்க்கண்ட் - உபி அரசுகளுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தை தோழர் லயோலா மணி நெறியாள்கை செய்தார் மூத்த பத்திரிக்கையாளர் சௌந்தர்ராஜன் நன்றியுரையாற்றினார்.
ஆர்பாட்டத்தில் பங்கெடுத்த மக்கள் எழுச்சியுடன் இருப்பதற்கு மக்கள் இசை பாடகர் ஜெய்பீம் அறிவு மானன் அவர்களின் எழுச்சியூட்டும் பாடல்களும் இடம் பெற்றது.
Tags: செய்திகள்