Breaking News

தேர்வில் வென்ற மாணவ கண்மணிகள் வாழ்விலும் வென்றிட வாழ்த்துகிறேன்! மமக தலைவர் MHJ

நிர்வாகி
0

 



மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:


இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு இடையில் நெருப்பாற்றில் நீந்துவது போல கடினமான சவாலை எதிர்கொண்டு இந்த ஆண்டு தேர்வில் வென்று சாதனைப் படைத்து இருக்கிறீர்கள். நீங்கள் எழுதி முடித்த தேர்வு சூழல் முழுக்க முழுக்க மாறுபட்டதாகும். 


தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் எதிர்காலத்தில் நீங்கள் விரும்பிய இலக்கை அடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். 


மதிப்பெண் விகிதம் கூடலாம் குறையலாம்; அதற்காக நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். உயர்கல்வியில் உரிய கவனம் செலுத்தி வாழ்க்கையில் உயரத்தை எட்ட வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தேர்வில் தேர்ச்சி அடையும் வாய்ப்பை இழந்தவர்கள் மனம் தளராதீர்கள். விரக்தி அடையாதீர்கள். தோல்விகளை வெற்றியின் படிகட்டுகளாக மாற்றி வென்றவர்கள் ஏராளமானோர் உண்டு. மீண்டும் தேர்வில் வெற்றி வாகை சூடி வாழ்வில் முன்னேற பிரார்த்திக்கின்றேன்.


இப்படிக்கு,

எம்.எச்.ஜவாஹிருல்லா

தலைவர்

மனிதநேய மக்கள் கட்சி

Tags: செய்திகள்

Share this