JMA முதல்வருடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு...
ஆகஸ்ட் 31,
160 ஆண்டு கால புகழ் பெற்ற லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வர் கல்லூரிக்கு இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை மேற்கொண்டார்.
மரியாதைக்குரிய முதல்வரும், கடலூர் மாவட்ட காஜியுமான
A. நூருல் அமீன் பாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களை சந்தித்து, செப் 10 முற்றுகை போராட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
ஆயுள் சிறைவாசிகளின் குடும்பங்கள் படும் துயரங்கள், சட்டம் தந்துள்ள வழிமுறைகள் ஆகியன குறித்தும் விளக்கினார்.
ஹஜ்ரத் அவர்கள் இந்த நல்ல முயற்சிக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாக கூறினார்.
தொடர்ந்து துணை முதல்வர்
K.சைபுல்லா மன்பஈ ஹஜ்ரத் மற்றும் பேராசிரியர் முகம்மது காசிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கும் பொதுச் செயலாளர் அவர்கள் அழைப்பிதழ் வழங்கினார்.
முன்னதாக லால்பேட்டையின் முக்கிய பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுச் செயலாளர் அவர்களை சந்தித்து, ஆயுள் சிறைவாசிகளுக்காக மஜக முன்னெடுக்கும் முற்றுகைக்கு தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் OR.ஜாகிர் ஹுசைன், மாவட்ட MJVS செயலாளர் AMK. முஹம்மது ஹம்ஜா, தகவல் தொழில்நுட்பணி முன்னாள் பொருளாளர் AHM ஹமீது ஜெகபர், துபை மாநகர முன்னாள் செயலாளர் சபிக்குர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், நகர பொருளாளர் நூர் முஹம்மது, நகர துணை செயலாளர் ஜாஹிர் மற்றும் பேரூர் நகர நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
Tags: செய்திகள்