Breaking News

வீராணம் ஏரியில் சம்பா சாகுபடிக்காக பாசன நீர் திறப்பு..!

நிர்வாகி
0


லால்பேட்டை  வீராணம் ஏரியில் சம்பா சாகுபடிக்காக 120 கிராமங்கள் பயன்பட பாசன நீரை அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் அவர்களால் திறப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்பு..!!


இன்று (19-09-2022) கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் சம்பா சாகுபடிக்காக அணைக்கரை கீழணையிலிருந்து பாசன நீரை வேளான் துறை அமைச்சர் MRK.பன்னீர் செல்வம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பாசன நீர் திறப்பில் "ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 93 ஏக்கர் நிலங்கள் சம்பா சாகுபடி செய்ய பயன்படுவதோடு வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுகளில் நீர் தேக்கப்பட்டு சுமார் 120 கிராமங்கள் நிலத்தடி நீர் உயரவும் வழி வகை செய்யும்" என அதிகாரிகளும் தெரிவித்தனர்.


இந்த பாசன நீர் திறப்பு நிகழ்வில் காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிந்தனை செலவன் அவர்களும் கடலூர் தெற்கு மாவட்ட திமுகவினரும், காட்டுமன்னார் கோயில் - லால்பேட்டை - சேத்தியாதோப்பு  நகர திமுகவினர் மற்றும் நீர் நிலை துறை அதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Tags: லால்பேட்டை

Share this