Breaking News

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய மாநாடு ; கேரளாவில் மாநாட்டு லோகோ வெளியிட்டனர் !

நிர்வாகி
0

 



இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1948 மார்ச் 10 அன்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களை கன்வீனராக கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக பரிணாமம் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு விழா வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை தீவுத்திடலில் அகில இந்திய மாநாடக நடைபெறவுள்ளது.


அது சமயம் இன்று 23/11/2022 புதன்கிழமை கேரளாவில் 75 ஆம் ஆண்டு பவள விழா மாநாட்டு லோகோவை தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப், தேசிய அரசியல் ஆலோசனை குழு தலைவரும் கேரள மாநில தலைவருமான பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் ஆகியோர் வெளியிட்டனர்.


தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலி குட்டி, தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி., தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்துஸ் சமது சமதானி, ஈ.டி. முஹம்மது பஷீர், கே. பி. அப்துல் மஜீத் எம்.எல்.ஏ., முனவ்வர் அலி ஷிஹாப் தங்கள், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் முனீர் கோயா எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: செய்திகள்

Share this