Breaking News

லால்பேட்டை துபாய் ஜமாத் நடத்திய மீலாது விழா.. தப்ஸீர் அஷ்ஷஃராவீ நூல் வெளியீட்டு விழா..!

நிர்வாகி
0

 


லால்பேட்டை துபாய் ஜமாத் நடத்திய மீலாது விழா மற்றும் தப்ஸீர் அஷ்ஷஃராவீ நூல் வெளியீட்டு விழா சீறும் சிறப்புமாக 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் துபாய் தேரா பணியாஸ் ஸ்கொயர் மெட்ரோ அருகிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.  


மௌலவி இனாமுல்லாஹ் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைக்க, ஜமாத்தின் துணைத்தலைவர் A.R ரியாஜூல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜமாத்தின் முன்னாள் செயலாளர் S.H ஹாஜா மைதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.


வாழ்த்துரையை லால்பேட்டை துபாய் ஜமாத் தலைவர் ஹாஜி M.A ஆசிக் அலி அவர்கள், சிங்கப்பூர் ஹவுஸ் நிறுவனர் 'என்பவுல் ஹைராத்' மௌலவி P.A ஜாபர் அலி மன்பயீ அவர்கள், கீழக்கரை 'முஹிப்புல் உலமா' முஹம்மது மஃரூஃப் காகா அவர்கள் மற்றும் தினத்தந்தி அமீரக பத்திரிகை நிருபர் 

முதுவை ஹிதாயத் ஆகியோர் வழங்கினார்கள்.

தப்ஸீர் அஷ்ஷஃராவீ தமிழாக்கம் நூலின் முதல் பிரதியை மௌலவி M.Y முஹம்மது அன்சாரி மன்பயீ மற்றும் மௌலவி P.A ஜாபர் அலி மன்பயீ ஆகியோர் வெளியிட ஜமாத் தலைவர் ஹாஜி M.A ஆசிக் அலி மற்றும் முன்னாள் தலைவர் S.M முஹம்மது ஆசிக் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.


இரண்டாம் பிரதியை மௌலவி M.Y முஹம்மது அன்சாரி மன்பயீ மற்றும் முஹம்மது மஃரூஃப் காகா ஆகியோர் வெளியிட தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள் பக்கீர் முஹம்மது மற்றும் ஹிப்பத்துல்லாஹ் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.


மூன்றாம் பிரதியை மௌலவி M.Y முஹம்மது அன்சாரி மன்பயீ மற்றும் M.A ஆசிக் அலி ஆகியோர் வெளியிட முன்னாள் தலைவர் S.ஜர்ஜீஸ் மற்றும் தினத்தந்தி அமீரக பத்திரிகை நிருபர் 

முதுவை ஹிதாயத் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.


மௌலவி M.Y முஹம்மது அன்சாரி அவர்களுக்கு ஜமாத்தின் பொருளாலர் A.R ரபியுல் அஹமது துணை பொருளாலர் R.P முஹம்மது பத்தாஹ் ஆகியோரும்,


மௌலவி P.A ஜாபர் அலி மன்பயீ அவர்களுக்கு ஜமாத்தின் துணை செயலாளர் M.T குதுரத்துல்லாஹ் மற்றும் ஜமாத் முன்னாள் துணைத்தலைவர் நஜீர் அஹமது ஆகியோரும்,


முஹம்மது மஃரூஃப் காகா அவர்களுக்கு ஜமாத்தின் மூத்த நிர்வாகிகள் முஹம்மது புஹாரி, S.M முஹம்மது அனஸ், பைஜி ஆகியோரும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.


அதனை தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகை தந்து இருக்கும் தப்ஸீர் அஷ்ஷஃராவீ மொழி பெயர்ப்பாளர் மௌலனா மௌலவி M.Y முஹம்மது அன்சாரி மன்பயீஅவர்கள் மீலாது மற்றும் தப்ஸீர் அஷ்ஷஃராவீ நூல் குறித்து சிறப்புரையாற்றினார்.


அவரின் உரையில் லால்பேட்டை துபாய் ஜமாத்தின் ஆரம்பக்கால வரலாறு மற்றும் தற்போதைய சமூகப்பணிகள் குறித்து பெருமிதமாக பேசியது குறிப்பிடத்தக்கது.


அவருக்கு லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பில் 'துபாய் புர்ஜ் கலீபா கேடயம்' வழங்கி கவுரவிக்கப்பட்டது.


இறுதியாக ஜமாத் செயலாளர் Z.பயாஜ் அஹமத் அவர்கள் நன்றியுரையாற்ற துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது. அல்ஹம்துல்லில்லாஹ்..!! 


இந்நிகழ்ச்சியை இலங்கை தமிழ் செம்மொழி FM முகநூல் மூலம் நேரலை செய்யப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு விளம்பர உதவி செய்த  சிங்கப்பூர் ஹவுஸ் தேரா துபாய், தஹியா டிராவல்ஸ் தேரா துபாய், இத்ரிஸ் டிராவல் ஏஜென்ஸி தேரா துபாய், பின் சேபா ஹஜ் உம்ரா சர்வீஸ் சார்ஜா ஆகியோருக்கும், எங்கள் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் லால்பேட்டை துபாய் ஜமாத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்..!! ஜஸாக்கல்லாஹ்..!!





















Tags: உலக செய்திகள் லால்பேட்டை

Share this