ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத் 9-ஆம் ஆண்டு பொதுக்குழு நடைபெற்றது..!
நிர்வாகி
1
சவூதி அரேபியா ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்தின் 9-ஆம் ஆண்டு பொதுக்குழு இன்று 06/01/2023 வெள்ளிக்கிழமை ஷரஃபியா லால்பேட்டை நண்பர்கள் ரூமில் நடைபெற்றது.
ஜமாஅத் தலைவர் T. N.ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை மொளலவி M.V அனீஸ் அஹமது அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்
ஜமாஅத்தின் செயல்பாடுகளை பற்றியும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் M.T.முஹம்மது ஆஷிக் அவர்கள் சிறப்புரையாற்றினார்
செயலாளர் J. முஹம்மது சுலைமான் அவர்கள் 2022-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்
ஜித்தாவில் வசிக்கும் ஜமாஅத்தார்கள் திறளாக கலந்துகொண்டு பொதுக்குழுவை சிறப்பித்தனர், இறுதியாக பொருளாளர் H.முஹம்மது அன்சர் அவர்கள் நன்றியுரையாற்றினார்
Tags: லால்பேட்டை
Keep it up- Good
பதிலளிநீக்குWork-Masha Allah