சவூதி அரேபியா இந்திய தூதர் சுஹேல் அஜாஸ் கான் ரியாத்தில் வரவேற்பு..!
சவூதி அரேபியாவிற்கான இந்தியத்தூதுவர் மேதகு சுஹேல் அஜாஸ் கான் அவர்களுக்கு இந்திய சமூகம் சார்பாக தலைநகர் ரியாத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
350க்கும் மேலான இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் புதியதாக பொறுப்பேற்ற இந்தியத்தூதரக்கு பூங்கொத்து மற்றும் பொன்னாடை போர்த்தி வரவேற்பளித்தனர், , தஃபர்ரஜ் எனும் தமிழ் நுண்கலை மன்றத்தின் தலைவர் திரு. அஹமது இம்தியாஸ் அவர்களும், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வெற்றிவேல் அவர்களும், இந்தியன் வெல்பேர் போரம் திரு, நூர்முஹம்மது அவர்களும், அயலகத்தமிழர்கள் இந்தியச்சங்கத்தின் சார்பாக திருமதி. கவிதா கணேஷ் அவர்களும், ரியா அமைப்பு சார்பாக திரு. மாதவன் அவர்களும், இந்திய நுண்கலை மன்றம் சார்பாக திரு. அருண் ஷர்மா அவர்களும், காயிதே மில்லத் பேரவை சார்பாக திரு.SM முஹம்மது நாசர் அவர்களும், உதயம் அமைப்பு சார்பாக திரு. சிக்கந்தர் அவர்களும், தமாம் தமிழ்ச்சங்கம் சார்பாக தலைவர் திரு. அப்துல் சத்தார் மற்றும் பொறுளாளர் அகமது பைஷல் அவர்களும், சவூதி தமிழ் மீடியா சார்பாக திரு. ஜாஹிர் ஹீசைன் மற்றும் ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், சவூதி தமிழ் கம்யூனிட்டி சார்பாக திரு. அப்துல்சமத் மற்றும் இப்றாஹிம் அவர்களும் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சமூக அமைப்புகளின் சார்பாக அமைப்புகளின் தலைவர்கள் பூங்கொத்து, சந்தன மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து 3 நிமிடங்கள் வாழ்த்துரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தமிழ்நாட்டின் பிரதிநிதியாக திரு. அஹமது இம்தியாஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது இந்தியப் பிரதமர் தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றி பேசிய வாசகங்களை எடுத்துக்கூறி திருக்குறள்மூலம் வரவேற்பு கொடுத்தது தமிழுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அமைந்தது.
மேலும் அவர் தமிழ் மற்றும் இந்தியச் சமூகம் சார்பாக இந்தியத்தூதுவருக்கு சில கோரிக்கைகளையும் வைத்தார், அதில் முக்கியமாக்
- சென்னைக்கு சவூதிஅரேபியாவிலிருந்து நேரடி விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு உரிய அமைச்சகத்திடம் முறையிடவும்
- இறந்தோர் உடலை தாயகம் அனுப்பி வைக்க சவப்பெட்டி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை கலையவும்.
- சவூதிஅரேபியாவில் உயர் படிப்புக்கான இந்தியக் கல்லூரிகளை கொண்டுவரவும்.
- தொழிலாளர் குறைதீர்க்கும் நாளை தூதரகத்தில் நடத்தவும்.
கோரிக்கைகள் வைக்கப் பட்டது. தமிழ் சமூகத்தின் குரலாக உரை நிகழ்த்திய இம்தியாஸ் அவர்களின் காணொளியை காண்போம்
(——-visual ——)
அதனை தொடர்ந்து இந்திய தூதர் his excellency Suhel Ajez Khan அவர்கள் சிறப்புறையாற்றினார்
இந்திய தூதரின் சிறப்புறையை காண்போம்
(——-visual video——-)
Tags: உலக செய்திகள்
congratulations
பதிலளிநீக்கு