லால்பேட்டை மக்தப் மதரஸாக்கள் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
ஜாமிஆ மன்பஉல் அன்வார் நிர்வாகத்திற்கு உட்பட்ட லால்பேட்டை நகரில் உள்ள ஒவ்வொரு மக்தப்களிலிருந்தும் முதல் தரத்தில் உள்ள ஆறு மாணவர்களை அந்தந்த மக்தப் ஆசிரியர்களால் தேர்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட அணைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து
ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் 26-2-2023 அன்று பொதுத் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வில்
90 கும் மேல் மதிப்பெண் பெற்று முதல் தரத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்
80 கும் மேல் மதிப்பெண் பெற்று இரண்டாம் தரத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்
70 கும் மேல் மதிப்பெண் பெற்று மூன்றாம் தரத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்
இன்ஷா அல்லாஹ் 5-3-2023 அன்று நடைப்பெறும் ஜாமிஆ மன்பஉல் அன்வார் பட்டமளிப்பு விழா இரவு பெண்கள் பயான் நிகழ்வில்
பரிசுகள் வழங்கப்படும்.
Tags: லால்பேட்டை