Breaking News

லால்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

நிர்வாகி
0

 லால்பேட்டை துபாய் ஜமாத், அல்ஜமா பைத்துல்மால் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை 05-02-2023 அன்று லால்பேட்டை மெயின்ரோடு பள்ளிவாசல் மதரஸா மண்டபத்தில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..!!


இதில் 700 பேருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 36 பேருக்கு இலவசமாக கண் அறுவைசிகிச்சை செய்ய கண்டறியப்பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர்கள்.


இந்நிகழ்வை கலந்துக்கொண்டு துவங்கி வைத்த கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி  ஷைகுல் ஜாமிஆ A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்களுக்கும், இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்து கலந்துக்கொண்டு சிறப்பித்த லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் நிர்வாகிகளுக்கும், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் வருகை தந்த மருத்துவக்குழுவினருக்கும், மதரஸா மண்டபத்தில் நடத்த இடமளித்த லால்பேட்டை மெயின்ரோடு பள்ளிவாசல் முத்தவல்லி மற்றும் ஜமாத்தினர்களுக்கும்,  அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டு முகாமை சிறப்பித்த லால்பேட்டை துபாய், அபுதாபி, கத்தார், சவூதி ஜமாத்தினர்களுக்கும், Volunteers வழங்கிய Fresh Bite Catering Servicesக்கும் எங்கள் லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்..







Tags: லால்பேட்டை

Share this