கத்தார் லால்பேட்டை ஜமாத் ன் ஆலோசனை கூட்டம்
கத்தார் லால்பேட்டை ஜமாத் ன் ஆலோசனை கூட்டம் 03.02.2023 வெள்ளிக்கிழமை மாலை அல்-முன்தஜா பார்க்ல் ஜமாத் தலைவர் S.A.யக்கின் அஹ்மத் தலைமையில் செயலாளர் பக்கிர் முஹம்மது, இணை செயலாளர்கள், முன்னால் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்றது இதில் கீழ்வரும் தீர்மானங்கள் ஆலோசனை பெறப்பட்டு முடிவெடுக்கப்பட்டது
* நமதூரில் இருந்து புதிதாக வேலை தேடி வந்த சகோதர்களை நமது குழுமத்தில் இணைத்து அவர்கள் பணியில் சேர ஆலோசனை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
*சந்தா தொகை வசூலை துரிதப்படுத்த வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமழான் மாதம் 07.04.2023 வெள்ளிக்கிழமை இப்தார் நிகழ்ச்சி அரசியல் பிரமுகர்கள் தவிர்த்தது இஸ்லாமிய சொற்பொழிவாளர் ஒருவரை அழைத்து *பினிக்ஸ் பள்ளி மமூரா* வில் சிறப்பாக நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
Tags: லால்பேட்டை