10ஆம் வகுப்பு இறுதி தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் 3 பேருக்கு சிறப்பு பரிசு .. ஜித்தா டிராவல்ஸ் அறிவிப்பு..!
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி 10 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கவிக்கும் விதமாக எழுத்துக்கோள் அடங்கிய பரிசுப் பொருட்களை லால்பேட்டை ஜித்தா டிராவல்ஸ் & டூரிஸ்ட் நிர்வாகத்தின் சார்பாக அதன் நிறுவனர் கவிஞர் நஜீர் அஹ்மத், ரைஸ் அஹமத் 29.03.2023 அன்று வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர் கழக தலைவர் ஃபத்தஹுதீன்,ஜாகிர் உசேன், ஜாபர் அலி கலந்து கொண்டனர்.
மாணவர் மத்தியில் ஜித்தா டிராவல்ஸ் நிறுவனர் நஜீர் அஹ்மத் அவர்கள் நபி மொழி பொழிந்து மாணவர்களுக்கு கல்வி அவசியத்தை பற்றி அறிவுக்கூறி இவ்வாண்டு 500க்கும் அதிகமாக மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு ஜித்தா டிராவல்ஸ் & டூரிஸ்ட் நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.
Tags: லால்பேட்டை