அய்மான் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு:-
அமீரகத் தலைநகர் அபுதாபியில் கடந்த நாற்பத்தி இரண்டு வருடங்களாக மக்கட் பணியாற்றி வரும் பாரம்பரியம் மிக்க அய்மான் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம்,
நேற்று 12/03/2023 ஞாயிரன்று அபுதாபியில் கூடியது.
இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கீழை ஜமாலுத்தீன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக மௌலவி ஏ.கே முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்களும், புதிய பொருளாளராக பசுபதி கோவில் ஜே. சாதிக் பாஷா அவர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விடை பெற்ற மேனாள் பொதுச் செயலாளர் லால்பேட்டை மௌலவி ஏ.எஸ் அப்துல் ரஹ்மானின் மகத்தான சமுதாயப் பணிகள் நினைவு கூறப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்று காலத்தில், தனி விமானங்கள் ஏற்பாடு செய்து, தாயகம் திரும்ப முடியாமல் அமீரகத்தில் சிக்கித் தவித்த ஆயிரக் கணக்கான தமிழர்களை தாயகம் திரும்ப வைக்க சிரமேற் கொண்டு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் நினைவு கூறப்பட்டது.
தாயகத்தில் அவரது பணிகள் மென் மேலும் சிகரம் தொட அய்மான் சங்கத்தின் சார்பில் நல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு தலைவர், மற்றும் இன்னாள் மேனாள் நிர்வாகிகள் தமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு, அமீரக மற்றும் தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவண்,
அய்மான் சங்கம்
அபுதாபி
Tags: உலக செய்திகள்