Breaking News

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

நிர்வாகி
0


அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி 08-03-2023 சனி மாலை கேரளா சோசியல் சென்டர் மெயின் ஹாலில் ஜமாஅத்தின் தலைவர் ஹாஜி. அஹ்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


நிகழ்ச்சியின் துவக்கமாக கிராஅத் நஸ்வான் அஹ்மத் பின் ரஃபீக் நாசர் அவர்களால் ஓதப்பட்டது.


 பொதுச் செயலாளர் முஹம்மத் ரிலா வரவேற்புரை நிகழ்த்தினார்.


அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் ஹுசைன் மக்கி ஹஜ்ரத் அவர்கள் மார்க்க உரையாற்றினார்.


அல்ஜமா பைத்துல் மாலின் முன்னால் செயலாளரும் துபை ஜமாஅத்தின் மூத்த உறுப்பினருமான அனிஸுர் ரஹ்மான் பைத்துல்மால் பற்றிய கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார்.


 சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக லால்பேட்டை ஜாமிஆவில் பணி செய்து பல ஆலிம்களை சமுதாயத்துக்கு உருவாக்கி வரும்  (தாயகத்திலிருந்து வருகை புரிந்த)  ஜாமிஆவின் பேராசிரியர் பெருந்தகை மவ்லவி ஹாஃபிழ் M.முஹம்மத் காசிம்  ஹஜ்ரத் அவர்களின்  பணியை கௌரவிக்கும் வண்ணம், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பாக தலைவர் ஹாஜி. அஹ்மத், முன்னால் தலைவர்கள் இஸ்மத்துல்லாஹ், சுஷைபுத்தீன், யாசிர் அரஃபாத் அலி அப்துல் மாலிக் மற்றும் அல் மக்தா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முஹம்மத் மன்சூர்  ஆகியோர் நினைவுப்பரிசினை வழங்கியும் , சால்வை அணிவித்தும் பாராட்டினர்.


பைத்துல் மால் முன்னால் செயலாளர் அனீஸுர் ரஹ்மான் அவர்களுக்கு துணை தலைவர் ஃபலுளுற்ரஹ்மான், பொதுச்செயலாளர் முஹம்மத் ரிலா, ஹம்தான் ரூம் செயலாளர் ஹஜ்ஜி முஹம்மத் அவர்களால் ஜமாஅத் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது.


துபை ஜமாஅத்தின் தலைவர் ஆஷிக் அலி அவர்களுக்கு பொருளாளர் அஹ்மத் ஜாபிர், முஸப்ஃபா பகுதி செயலாளர் நூருல் அமீன், ஹம்தான் ராயல் ரூம் செயலாளர் இம்தியாஜ் அஹ்மத் அவர்களால் சால்வை அணிவிக்கப்பட்டது.


மவ்லவி ஹாபிழ் M.முஹம்மத் காசிம் ஹஜ்ரத் அவர்கள் இஃப்தார் துஆ மற்றும் சிறப்புரையாற்றினார்கள்.


இறுதியாக..துஆ மவ்லவி ரஷீத் பைஜி அவர்களால் ஓதப்பட்டது.


நன்றியுரையினை ஜமாஅத்தின் பொருளாளர் அஹ்மத் ஜாபிர் வழங்கினார்.


நிகழ்ச்சியினை சிராஜுல் அமீன் தொகுத்து வழங்கினார்.


அழைப்பினை ஏற்று இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த ஹஜ்ரத் அவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும், துபை ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அய்மான் சங்க நிர்வாகிகள், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜமாஅத்தின் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.









இங்ஙனம்,

*அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்.*

Tags: அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் லால்பேட்டை

Share this