சமூகஆர்வலர் அனீசூர்ரஹ்மான் துபாய் வருகை..!
லால்பேட்டை துபை ஜமாத்தின் 35ஆம் ஆண்டுவிழா மற்றும் 22ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சிறப்பு அழைப்பாளராக
லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் முன்னாள் செயலாளரும், லால்பேட்டை துபாய் ஜமாத் உருவாக முக்கியமானவருமான சமூக ஆர்வலர் S.M. அனீசூர்ரஹ்மான் அவர்கள் தாயகத்திலிருந்து புறப்பட்டு இன்று இரவு துபாய் வந்தடைந்தார்கள்.
அவர்களை துபாய் விமானநிலையத்தில் லால்பேட்டை துபாய் ஜமாத் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.
இந்நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் துபாய் பணியாஸ் மெட்ரோ அருகிலுள்ள 'லேண்ட்மார்க் ஹோட்டல்' முதல்தளத்தில் நடைபெறவிருக்கிறது.
லால்பேட்டை அமீரகவாழ் மண்ணின் மைந்தர்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tags: லால்பேட்டை