லால்பேட்டை துபாய் ஜமாத் இஃப்தார் நிகழ்ச்சி..!
நிர்வாகி
0
லால்பேட்டை துபாய் ஜமாத் 35ஆம் ஆண்டுவிழா மற்றும் 22ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி சீறும்சிறப்புமாக நேற்று ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் துபாய் பணியாஸ் மெட்ரோ அருகிலுள்ள 'லேண்ட்மார்க் ஹோட்டலில்' நடைபெற்றது.
ஜமாத்தின் துணைத்தலைவர் மௌலவி A.R ரியாஜூல்லாஹ் மன்பயீ நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.ஹாஃபிழ் O.Y அமானுல்லாஹ் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். ஜமாத்தின் செயலாளர் Z.பயாஜ் அஹமத் வரவேற்புரையாற்றினார்.
ஜமாத்தின் தலைவர் ஹாஜி M.A ஆசிக் அலி நிகழ்ச்சிக்கு தலைமையேற்று ஜமாத்தின் செயல்பாடுகள் குறித்து துவக்கவுரையற்றினார்.
ஜகாத்தின் கடமைகள் மற்றும் ஃபித்ரா கடமைகள் குறித்து'முஹிப்புல் உலமா' முஹம்மது மஃரூஃப் காகா விளக்கவுரையாற்றினார். உடல் ஆரோக்கியம் குறித்து டாக்டர் S.M முனாஜ் அஹ்மத் அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
இஃப்தார் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பமானது. விருது வழங்குதல், பொன்னாடை அனுவித்தல் நிகழ்வை ஜமாத்தின் தகவல் தொடர்பாளர் S.H ஹாஜா மைதீன் தொகுத்து வழங்கினார்.
"சமுதாய புரவலர் அல்ஹாஜ் அப்துல் பாரி விருது"
லால்பேட்டை மக்களுக்கு அல்ஜமா பைத்துல்மால் மூலம் சிறப்பான சேவைகள் செய்துவரும் S.M அனிசூர்ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை ஜமாத் தலைவர் ஹாஜி M.A ஆசிக் அலி, ஜமாத் செயலாளர் Z. பயாஜ் அஹ்மத் ஆகியோர் வழங்கினார்கள்.
"சேக் மக்தூம் பின் ராசித் அல் அல் மக்தூம் விருது"
லால்பேட்டை மக்களுக்கு லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் மூலம் தகவல்தொடர்பை ஏற்படுத்தி சேவை செய்துவரும் J. நூருல் அமீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை ஜமாத் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஹாஜி M.T.முஹம்மது அஸ்ரப், S.H. ஹாஜா மைதீன் ஆகியோர் வழங்கினார்கள்.
"சேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் விருது" அமீரகத்தில் இறந்த வெளிநாட்டுவாழ் மக்களின் உடலை தாயகத்திற்கு அனுப்ப உதவிசெய்துவரும் அஸ்ரப் தாமரச்சேரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை அவரின் சார்பில் A.J.முஹம்மது மைதீன் பெற்றுக்கொண்டார்.
இவ்விருதை T.பயாஜ் அஹ்மத், H.அஃப்லல் வழங்கினார்கள்.
"ஆரம்பகால நவீன மருத்துவத்தின் தந்தை 'இப்னு சினா' விருது"
அமீரகத்தில் கொரோனா காலக்கட்டங்களில் நம் மக்களுக்கு சிறப்பான சேவை செய்திட்ட டாக்டர் S.M முனாஜ் அஹ்மத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை துணைப்பொருளாலர் R.P முஹம்மது பத்தாஹ், ஜமாத் துணைத்தலைவர் மௌலவி A.R ரியாஜூல்லாஹ், ஜமாத் நிர்வாகக்குழு உறுப்பினர் E. நியமத்துல்லாஹ் ஆகியோர் வழங்கினார்கள்.
"ஆரம்பகால நவீன மருத்துவத்தின் தந்தை 'இப்னு சினா' விருது"
அமீரகத்தில் கொரோனா காலக்கட்டங்களில் நம் மக்களுக்கு சிறப்பான சேவை செய்திட்ட டாக்டர் இக்ராமுல்லா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை ஜமாத் பொருளாலர் A.R. ரபியுல் அஹமது, ஜமாத் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் A. ஹம்மாத், A. புராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
இறுதியாக தாயகத்திலிருந்து லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சிறப்பு அழைப்பாளராக வருகைத்தந்துள்ள முஹம்மது காசிம் ஹஜ்ரத் அவர்களுக்கு ஜமாத்தின் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
நினைவுப்பரிசை ஜமாத் தலைவர் ஹாஜி M.A. ஆசிக் அலி, ஜமாத் செயலாளர் Z. பயாஜ் அஹ்மத், ஜமாத் பொருளாலர் A.R. ரபியுல் அஹமது ஆகியோர் வழங்கினார்கள்.
'முஹிப்புல் உலமா' முஹம்மது மஃரூஃப் காகா அவர்களுக்கும், லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் அல்ஹாஜ் S.M முஹம்மது ஆரிப் அவர்களுக்கும், அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் V. அஹமது அவர்களுக்கும், அய்மான் சங்க பொதுச்செயலாளர் அப்பாஸ் மிஸ்பாஹி அவர்களுக்கும், தினந்தந்தி அமீரக நிருபர் பத்திரிக்கையாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கும், மர்ஹபா சமூகநல பேரவை நிர்வாகி முஹம்மது தையூப் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
அதன்பின் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலவி ஹாஃபிழ் M.முஹம்மது காசிம் ஹஜ்ரத் ரமலான் சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள்.
இறுதியாக S.H ஹாஜா மைதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.
ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்..!!
எங்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த லால்பேட்டை துபாய் ஜமாத், அபுதாபி லால்பேட்டை ஜமாத், மர்ஹபா சமூகநல பேரவை, அய்மான் சங்கம், ஈமான் சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள், லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
லால்பேட்டை துபாய் ஜமாத் நிர்வாகக்குழு
நிகழ்ச்சி முழு வீடியோ கீழே உள்ள லின்க்கில்..
Tags: லால்பேட்டை