கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் ஐந்தாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது!
தோஹா ஏப்ரல் 08,2023
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் ஐந்தாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி 07-04-2023 வெள்ளிகிழமை மாலை 4:30 மணியளவில் தோஹாவில் உள்ள கலக்க்ஷேத்ரா அரங்கில் வெகு சீரோடும், சிறப்போடும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
விழா நடைபெற்ற அரங்கத்திற்கு மெளலானா மொளலவி ஷம்சுல் மில்லத் K.A முஹம்மது ஜக்கரிய்யா ஹள்ரத் அவர்களின் பெயரை நினைவுகூறும் விதமாக சூட்டப்பட்டிருந்தது.
கத்தார் லால்பேட்டை ஜமாஅத் மூத்த உறுப்பினர் ஹாஜி முஹம்மது ஷபீர் அவர்கள் தலைமையேற்க, முஹம்மது உஸாமா முன்னிலை வகிக்க, ஜமாஅத்தின் தலைவர் யக்கீன் அஹ்மது , செயலாளர் முஹம்மது பக்கீர், மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துவக்கமாக ஜமாஅத்தின் தலைவர் யக்கீன் அஹ்மது அனைவரையும் வரவேற்க,செயலாளர் முஹம்மது பக்கீர் அதனை முன்மொழிய , ஜமாஅத்தின் செயல்பாடுகள் வருங்கால திட்ட பணிகள் குறித்து துணை செயலாளர் முஹம்மது புஹாரி பேசினார், தொடர்ந்து ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பாளர் அஹமது ரிலா அவர்கள் "லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின்" பணிகள், எதிர்கால திட்ட பணிகள் சேவைகளை பற்றி எடுத்துரைத்தார்.
"இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை IQIC” மார்க்க செயலாளர் மெளலவி பேராசிரியர் சாதிக் மிஸ்பாஹி அவர்கள் ரமலானை பற்றியும்,
மெளலானா மெளலவி அல்ஹாபிழ் காயல்பட்டினம் லெப்பை பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்கள் ஸ்தகா, ஜகாத், பித்ரா பற்றி சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக INDIAN EMBASSY கீழ் இயங்ககூடிய Indian Community Benevolent Forum (ICBF) பொருளாளர் குல்தீப் கார் பஹல் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள்,பல்வேறு ஊர் ஜமாஅத்தின் பிரநிதிகள், இந்திய கலாச்சார மையத்தின் நிர்வாகிகள் ICC, ICBF - Indian Community Benevolent Forum நிர்வாகிகள், சமுதாய சேவையாளர்கள்,சமுதாய அமைப்பை சார்ந்தவர்கள் என பலர் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக ஜமாஅத்தின் முன்னால் தலைவர் முஹம்மது தஸ்லீம் நன்றியுரையாற்ற துஆவுடன் நிறைவுபெற்றது.
லால்பேட்டை மண்ணிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தார் லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள், மற்றும் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Tags: லால்பேட்டை