கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் இலவச சுன்னத் (கத்னா) முகாம் நடைபெற்றது!!
மே 27,2023
கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் இலவச சுன்னத் (கத்னா) முகாம் இன்று 27-05-2023 காலை 10 மணியளவில் ஸ்கூல் தெருவில் உள்ள லால்பேட்டை ஹெல்த்கேர் சுகாதார மையம் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய 7 சிறார்களுக்கு சுன்னத் (கத்னா) செய்யப்பட்டது, கத்னா செய்யப்பட்ட சிறார்களுக்கு ஜமாஅத்தின் சார்பில் பழங்ககள் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் நிரிவாகிகள் அழைப்பை ஏற்று ஜமாஅத்தின் உறுப்பினர்கள் மற்றும் அல்ஜமா பைத்துல் மால் நிர்வாகிகள் மற்றும் இதர லால்பேட்டை வெளிநாடு வாழ் ஜமாஅத்தின் நிர்வாகிகள் பார்வையிட்டு கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக சுன்னத் (கத்னா) செய்த மருத்துவர் மற்றும் லால்பேட்டை ஹெல்த்கேர் சுகாதார மையம் ஊழியர்களுக்கு ஜமாஅத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Tags: லால்பேட்டை