லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்ச்சி
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ஹாஜிகள் வழியனுப்பு விழா இன்று 31-5-2023 புதன் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் இவ்வருடம் புனித ஹஜ் பயணம் செல்லும் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா நடைப்பெற்றது
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி A.M.F முஹம்மது சாதிக் அவர்கள் தலைமை வகித்தார்கள்
ஜாமிஆ மன்பஉல் அன்வார் நிர்வாகக்குழு செயலாளர் அல்ஹாஜ் K. A அமானுல்லாஹ் அல்ஹாஜ் A.M முஹம்மது ஜாஃபர் அல்ஹாஜ் S. ஜாஃபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி ஷைகுல் ஜாமிஆ நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் உபதேசம் செய்து து ஆ செய்தார்கள்
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லானா மவ்லவி ஹாபிழ் நூருல்லாஹ் ஹள்ரத் அவர்கள் ஹஜ் செய்வதின் சிறப்பு பற்றி உரை நிகழ்த்தினார்கள்
ஜாமிஆ மன்பஉல் அன்வார் மாணவர்கள் கிராஅத் ஓதி மற்றும் இஸ்லாமிய அரபு கீதம் பாடினர்
இவ்விழாவில் பள்ளிவாசல் முத்தவல்லிகள் ஜமாஅத் நிர்வாகிகள் மதரஸா மாணவர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்
Tags: லால்பேட்டை