Breaking News

ஆடம்பரம் குழந்தைகளுக்கு! ஆபத்து எல்லாம் எப்படித் தெரியுமா?

நிர்வாகி
0

 



இந்திய சமூகத்தில் அன்றாட தேவைகளான உணவு , உடை, வசிப்பிடம் போன்றவற்றிற்கே வழியில்லாமல் இன்றும் மக்கள் இருப்பதை காண முடிகிறது. அதே நேரத்தில் பல தலைமுறைக்கும் தேவையான சொத்தை சேர்ப்பதும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. 


இதனால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுவதுடன் சொத்து அதிகமுடையவரின் குழந்தைகளுக்கு உழைப்பின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் தெரிவதில்லை இதனால் சிறு பிரச்னைகளைக் கூட கையாளத் தெரியாதவர்களாக குழந்தைகள் மாறிவிடுகின்றனர் என்று பலரும் கூறுகின்றனர்.


இது குறித்து கேட்டபோது நிதி ஆலோசகர்கள் கூறுவது “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது.


1) வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் குழந்தைகளிடம் செலவிடுவதற்கு நேரம் இருப்பதில்லை. இதனால் பெற்றோருக்கு ஏற்படும் குற்ற உணர்வின் காரணமாக குழந்தைகள் ஆசைப்பட்ட பொருள்களை வாங்கிக் கொடுக்க விரும்புகின்றனர்.


2) சமூகத்தில் நாங்கள் வசதியானவர்கள் என்று காண்பிப்பதற்காகவும் பெற்றோர்கள் இப்படி நடந்துகொள்கின்றனர்.


இதனால் குழந்தைகளுக்கு அந்த பொருளுக்கு பின்னால் இருக்கும் உழைப்பு தெரிவதில்லை. பணத்தின் மதிப்பும் தெரியாததால் அவர்கள் விருப்பத்திற்கு காசை தண்ணீராக செலவழிக்கின்றனர். 


அது மட்டுமல்லாமல் வளரும் இளம் தலைமுறையினருக்கு குறைந்த விலையில் தரமான பொருள் தேடி வாங்கும் தேடல் மனநிலை இருப்பதில்லை. விரும்பியது கிடைக்கும் வரை காத்திருக்கும் குணங்களும் அவர்களுக்கு இருப்பதில்லை. இதனால் அவர்கள் சிறு பிரச்சனைகளைக் கூட சமாளிக்க இயலாதவர்களாக ஆகின்றனர்” என ஆலோசர்கள் கூறிகின்றனர்.

Tags: பயனுள்ள தகவல்

Share this