லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித், ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் சுதந்திர தின விழா நிகழ்ச்சி
நம் இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று 15-8-2023 செவ்வாய் கிழமை காலை லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்வி AMF முஹம்மது சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார்கள்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் நிர்வாக குழு செயளாலர் அல்ஹாஜ் K.A .அமானுல்லாஹ் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லானா மவ்லவி ஹாபிழ் முஹம்மது நூருல்லாஹ் ஹள்ரத் அவர்கள் திருமறை வசனங்கள் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்கள்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் மாணவர் ஹாபிழ் ஷம்சுத்தீன் அவர்கள் சுதந்திர தின சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர், கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி ஹாபிழ் நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தேசிய கொடி ஏற்றி து ஆ செய்தார்கள்
இந்நிகழ்வில் ஜமாஅத்தார்கள் , ஜாமிஆ மன்பவுல் அன்வார் மாணவர்கள், மக்தப் மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை