லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வழக்கறிஞர் முஹம்மது முஸரப் அவர்களுக்கு கவுரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது !
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து லால்பேட்டை நகருக்கு பெருமை சேர்த்துள்ள வழக்கறிஞர் முஹம்மது முஸரப் அவர்களுக்கு கவுரவிப்பு நிகழ்ச்சி 04/09/2023 திங்கள் கிழமை மாலை 7:00 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர தலைவர் எஸ். எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார்.
நகர செயலாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி நிகழ்வினை தொகுத்து வழங்கினார். நகர இளைஞரணி துணை தலைவர் மவ்லானா தவ்ஃபீக் மன்பஈ கிராஅத் ஓதி துஆ செய்தார்.
மாவட்ட துணை தலைவர்கள் அனீசுர் ரஹ்மான், முஹம்மது ஹாரிஸ் மன்பஈ, மாவட்ட இளைஞரணி பொருளாளர் எம்.முஹம்மது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் பாரிஸ், நகர துணை தலைவர் எம்.முஹம்மது அய்யூப் மன்பஈ ஆகியோர் வழக்கறிஞர் முஹம்மது முஸரப் அவர்களை வாழ்த்தி பேசினர்.
வழக்கறிஞர் முஹம்மது முஸரப் அவர்களுக்கு நகர முஸ்லிம் லீக் சார்பில் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
நகர பொருளாளர் எம்.ஹெச். முஹிப்புல்லா நன்றி கூறினார்.
மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாக்கிர் ஹுசைன் எம்.சி.
முஸ்லிம் லீக் நிர்வாகிகள் எம்.எஸ்.முஹம்மது சித்தீக், எஸ்.எம்.முஹம்மது ஹாமிது, மவ்லவி ஏ.முஹம்மது மன்பஈ, ஹிதாயத்துல்லா, சிராஜூதீன், முஷாஹிர், முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து முஸ்லிம் லீக்கின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Tags: லால்பேட்டை