காட்டுமன்னார்குடியில் மீலாது நபி திருநாள்...! மதநல்லிணக்க விழா...!
கடலூர் மாவட்டம் (தெற்கு) காங்கிரஸ் கமிட்டி சார்பில் " மீலாது நபி திருநாள்" மதநல்லிணக்க விழாவாக காட்டுமன்னார்குடி அரசு மருத்துவ மனையில் இன்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன் தலைமை வகித்தார். அரசு மருத்துவர்கள் ஜெயசெல்வி மற்றும் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதையொட்டி மாவட்ட காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் நஜீர்அஹமது மருத்துவமனையின் உள்நோயாளிகள் 50 பேருக்கு பிரட், பிஸ்கெட் பழம், ஹார்லிக்ஸ் பாக்கெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் மருத்துமனை உபயோகத்திற்கு ' வாட்டர் பில்டரும் வழங்கினார். விழாவில் எல்.இ.பி.ஜோதிமணி, இளங்கீரன்,செல்வம்
வாசு, நெல்சன், மடுவங்கரை சுந்தரராஜன்
சிவ சக்தி ராஜா ஆடூர்முருகன், எள்ளேரி பன்னீர் இளைஞர் காங்கிரஸ் வசந்தராஜ், பரந்தாமன்,குமராட்சி வட்டாரத்தலைவர் பகத்சிங், அழகுராஜன் சர்புதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் ரஞ்சித் நன்றி கூறினார்.
Tags: செய்திகள்