Breaking News

லால்பேட்டை நகரைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா !

நிர்வாகி
0

 


சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநில பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட லால்பேட்டை நகரைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி 09/10/2023 திங்கள் கிழமை அன்று இரவு 8.30 மணியளவில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர அலுவலகத்தில் நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


நகர இளைஞர் அணி துணை தலைவர் மவ்லானா முஹம்மது தௌஃபீக் மன்பஈ கிராஅத் ஓதினார்.

நகர செயலாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி அனைவரையும் வரவேற்றார்.


மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் எம்.ஜே.மசூது அஹமது, மாவட்ட இளைஞரணி பொருளாளர் எம்.முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


புதிய நிர்வாகிகளை வாழ்த்தி நகர கௌரவ ஆலோசகர் கவிஞர் ஏ. முஹிப்புல்லா வாழ்த்துரை வழங்கினார்.


லால்பேட்டையைச் சேர்ந்த புதிய நிர்வாகிகளான மாநில கௌரவ ஆலோசகர் மருத்துவர் ஏ.ஆர்.அப்துஸ் ஸமது MD, மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, மாநில தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் பாரிஸ், மாநில இளைஞர் அணி அமைப்புக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.அஹமது ஆகியோர் நகர நிர்வாகிகளின் வரவேற்பை பாராட்டை ஏற்று ஏற்புறையாற்றினர்.


நகர நிர்வாகிகள் அனைவரும் புதிய மாநில நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


நகர பொருளாளர் எம்.எச்.முஹிப்புல்லா நன்றி கூறினார் 


நகர துணை தலைவர் மெளலவி ஏ அமீனுல் ஹுசைன் மன்பஈ துஆ ஓதினார்.


கூட்டத்தில் புதிய மாநில தலைமை நிர்வாகிகள் மாநில தலைவர் *முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை*, பொதுச் செயலாளர் *கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சாஹிப்,* பொருளாளர் *எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் சாஹிப்,* மாநில முதன்மை துணைத் தலைவரும், வக்ஃப் வாரிய தலைருமான *எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப்,* மாநில துணை தலைவர் *கே.நவாஸ் கனி எம்.பி சாஹிப்* ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


நிகழ்ச்சியில் ஹாஜி ஏ.ஆர்.சபியுல்லா, நகர கௌரவ ஆலோசகர்கள்: மெளலவி ஏ.ஏ.முஹம்மது மன்பஈ, ஹாஜி வி.ஏ.அப்துல் ரஹ்மான், துணை தலைவர்கள்: எஸ்.எம். ஹாமிது,கே.எஸ்.சபியுல்லா, எம்.எச்.முஹம்மது பஷீர், நகர துணை செயலாளர்கள்: எம்.எஸ்.முஹம்மது சித்தீக், நகர பிரமுகர்கள்: ஹஜ்ஜி முஹம்மது, எம்.எச்.முஹம்மது நாஸர், பக்கிர் முஹம்மது, பஜ்லுல்லாஹ், எம்.எச்.நஜ்முதீன், ஜாபர் அலி, எச்.எம்.முஹம்மது ஹசன், ரஹ்மத்துல்லா ஜமாலி, முஹம்மது ஹாஜா, இம்தாதுல்ல, ஜாகிர் ஸ்டோர் ஹஜ்ஜி முஹம்மது, இளைஞர் அணி செயலாளர் ஹிதாயத்துல்லா, மாணவரணி மாவட்ட தலைவர் ஆஷிக் அலி, மின்னணு ஊடகத்துறை செயலாளர் ஹாசிம், நகர மாணவரணி தலைவர் முசாஹிர், தஸ்லிம், நிஜாம், ராஷிது, முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.















Tags: லால்பேட்டை

Share this