Breaking News

சிதம்பரம் நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முப்பெரும் விழா

நிர்வாகி
0

  



சிதம்பரம் நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முப்பெரும் விழா நாளை (21/10/2023 சனிக்கிழமை)  நடைபெற இருக்கிறது.


இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, தர்மயுக வழிப்பேரவையின் அய்யாவழி ஒருங்கிணைப்பாளர் அய்யாவழி பி. பால முருகன் அய்யா, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில பொதுச்செயலாளர் மவ்லானா வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி ஹள்ரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ். அப்துர் ரஹ்மான் ரப்பானி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.


முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள்  வருகின்றனர்.



லால்பேட்டை எக்ஸ்பிரஸ் யூடியூப் தளத்தில் நேரலையாக 21.10.2023 மாலை 5.30 மணி முதல் காணலாம்


https://youtube.com/live/A3MlHEqPrn4?feature=share






Tags: சமுதாய செய்திகள்

Share this