Breaking News

லால்பேட்டையில் டயாலிஸ் சென்டர் உருவாக்குக... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை!

நிர்வாகி
0

 பெறுதல்:-

தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி, லால்பேட்டை. 



லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் சார்பில் லால்பேட்டையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் லால்கான் தோப்பில் திருமண மண்டபம் எழுப்புவதற்கு முயற்சிகள் நடப்பதாக அறிகிறோம்.


லால்பேட்டையில் ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் திருமண மண்டபம், திருமண காலங்களில் மக்களுக்கு தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அத்தோடு பல மஹல்லாக்களிலும் திருமண மண்டபங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.


இந்த சூழலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், விளையாட்டு - உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான தேவைகளை பெற்றுக் கொள்ளவும்,

கல்விக்கண் திறந்த இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் கவனங்கள் சிதறாமல் கல்வி பயிலவும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என நகர முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


அத்தோடு லால்பேட்டை நகரில் இருந்தும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் பாண்டிச்சேரி போன்ற தொலை தூர ஊர்களுக்கு சென்று  டயாலிஸ் செய்து வரும் நோயாளிகளின் சிரமத்தை கவனத்தில் கொண்டு,


லால்பேட்டை மாநகரில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் டயாலிஸ் சென்டர் ஒன்றை உருவாக்கி  நோயாளிகளின் அலைச்சலை குறைத்து அவர்களின் ஆரோக்கியத்திற்கு (லால்கான் தோப்பை தவிர்த்து வேறு பகுதியில்) டயாலிஸ் சென்டர் உருவாக்கிட பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கையையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன் வைக்கிறது.


வல்ல நாயன் நம் அனைவர்களின் எண்ணங்களையும் தூய்மையாக்கி, அனைவருக்கும் சேவையற்றும் பாக்கியத்தை வழங்குவானாக ஆமீன்.


நன்றி


வஸ்ஸலாம்.


தங்கள் அன்புள்ள,


தலைவர் / செயலாளர் / பொருளாளர்




Tags: லால்பேட்டை

Share this