ஸாலிஹீன் மருத்துவமனை திறப்பு விழா..!
நிர்வாகி
0
இறைவனின் பேரருளால் சமுதாயத்தின் பெருங்கனவு ஒன்று நனவாகும் வகையில் ஸாலிஹீன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா (04-11-2023) அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது.......
ஸாலிஹீன் அறக்கட்டளையின் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை அறங்காவலர் டாக்டர் இப்ராஹிம் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் டாக்டர் அபுல் ஹசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
அறக்கட்டளையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் ரசாக், KKSK ரபீக், MAM நிஜாம், ரஹ்மத்துல்லாஹ், ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சமுதாய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள், தமிழ் நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வெ கனேசன் அவர்கள், ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் மௌலானா மௌலவி காஜா முயினுதீன் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்கள், நீதியரசர் KN பாஷா அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் அவர்கள், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொறுப்பாளர் ஷாஜஹான், மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி எம்பி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஸாலிஹீன் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஏராளமான ஜமாஅத் மற்றும் சேவை நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
அறக்கட்டளையின் இணைச் செயலாளர் மில்லத் இஸ்மாயில் நன்றி கூறினார்.
Tags: சமுதாய செய்திகள் செய்திகள்