காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅதுல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இன்று 7-11-2023 செவ்வாய் கிழமை காலை 10:30 மணிக்கு லால்பேட்டை ஜன்னத்துன் நயீம் மஸ்ஜிதில் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி A சஃபியுல்லா மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி ஹாபிழ் A நூருல் அமீன் ஹள்ரத் மற்றும் தேர்தல் குழு பொருப்பாளர்கள்
மவ்லானா முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி. மவ்லானா முஹம்மது யாசின் மழாஹிரி
மவ்லானா ஜாஃபர் அலி மன்பஈ ஆகியோர் முன்னிலையில் காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
தலைவராக
மவ்லானா மவ்லவி
அப்துல் காலிக் மன்பயீ ஹள்ரத் லால்பேட்டை அவர்களும்
செயலாளராக
மவ்லானா மவ்லவி ஹாபிழ் முஹம்மது இர்ஷாத் பாஜில் மன்பயீ ஹள்ரத் லால்பேட்டை அவர்களும்
பொருளாளராக
மவ்லானா மவ்லவி முஹம்மது இஸ்மாயில் மன்பயீ ஹள்ரத் கொள்ளுமேடு அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
Tags: லால்பேட்டை