மஸ்ஜித் ஆதம் பள்ளி வளாகத்தில் இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு குடியரசு தின விழா..!
இன்று 26-1-2024 வெள்ளிக்கிழமை காலை ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு லால்பேட்டை மஸ்ஜித் ஆதம் பள்ளி வளாகத்தில் இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
மஸ்ஜித் ஆதம் பள்ளியின் முத்தவல்லி அல்ஹாஜ் M. முஹம்மது மன்சூர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்
மதரஸா தாருல் ஹுப்பாஜ் மாணவர்கள் நிகழ்வை சிறப்பு படுத்தினார்கள்
சிங்கப்பூர் பென்கூலன் மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல் ஹாபிழ்
S.A ஹலீல் அஹமது ஹஸனி ஹஜ்ரத் அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்புரை நிகழ்த்தி இந்திய நாட்டு மக்கள் அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ து ஆ செய்தார்கள்
மஸ்ஜித் ஆதம் பள்ளி இமாம் மௌலானா மௌலவி M.முஹம்மது இர்ஷாத் இர்ஷாதி ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி
சிறப்புடன் விழா முடிவு பெற்றது
இவ்விழாவில் ஆதம் மஸ்ஜித் நிர்வாகிகள் மக்தப் மதரஸா மாணவ கண்மணிகள் ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
Tags: லால்பேட்டை