Breaking News

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபுக் கல்லூரி 80 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா !

நிர்வாகி
0

 



வரலாற்று சிறப்புமிகு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபுக் கல்லூரியின் 161 ஆம் ஆண்டு விழா மற்றும் 80 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா !


வரலாற்று சிறப்புமிகு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபுக் கல்லூரியின் 161 ஆம் ஆண்டு விழா மற்றும் 80 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 18/02/2024 ஞாயிற்று கிழமை அன்று தாருத் தஃப்ஸீர் கலை கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


ஜெ.எம்.ஏ. அரபுக் கல்லூரி தலைவர் ஏ.எம்.எஃப்.முஹம்மது சாதிக் அவர்கள் தலைமை வகித்தார்.


ஜெ.எம்.ஏ. அரபுக் கல்லூரி செயலாளர் ஹாஜி கே.ஏ அமானுல்லா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.


ஜெ.எம்.ஏ. அரபுக் கல்லூரி முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு காஜியுமான, ஷைகுல் ஜாமிஆ மவ்லானா மவ்லவி நஜ்முல் மில்லத்

ஏ. நூருல் அமீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கினார்கள்.


சென்னை அடையாறு ஜாமிஆ அல்ஹுதா அரபுக் கல்லூரி முதல்வர் மெளலானா மௌலவி எம்.சதீதுத்தீன் பாகவி ஹஜ்ரத், மன்பஈ பேரவை மாநில பொருளாளர், முதுகுளத்தூர் மெளலானா மௌலவி எஸ்.பஷீர் அகமது சேட் மன்பஈ ஹஜ்ரத், பெரியகுளம் அஷர(த்)துல் முபஷ்ஷரா அரபுக் கல்லூரி நிறுவனரும், முதல்வருமான 

மெளலானா மெளலவி எம்.எம் முகம்மது ஹுசைன் மன்பஈ ஹஜ்ரத், கல்மேல்குப்பம் மெளலானா மௌலவி அப்துல் கரீம் ஹஜ்ரத், தென்காசி மெளலானா மௌலவி முஹிப்புல்லா ஹஜ்ரத் ஆகியோர் பட்டமளிப்பு பேரூரையாற்றினர்.


ஜெ.எம்.ஏ.அரபுக் கல்லூரி பொருளாளர் மௌலவி ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்கள் நன்றியுரையாற்றினார்.


இந்நிகழ்வில் ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபுக் கல்லூரியின் கண்ணியமிக்க பேராசிரியர்களான துணை முதல்வர் மெளலானா மௌலவி எஸ்.ஏ சைபுல்லா ஹஜ்ரத், மெளலானா மௌலவி ஹாபிழ் காரி ஆர்.இஜட். முஹம்மது அஹ்மது ஹஜ்ரத், மெளலானா மௌலவி ஹாபிழ் முனவ்வர் ஹசன் ஹஜ்ரத், மெளலானா மௌலவி எஸ்.முஹம்மது அலி ஹஜ்ரத், மெளலானா மௌலவி ஹாபிழ் எம். முஹம்மது காஸிம் ஹஜ்ரத், மெளலானா மௌலவி வி.ஆர். அப்துஸ் சமது ஹஜ்ரத், மெளலானா மௌலவி ஏ.ஆர்.சலாஹுதீன் ஹஜ்ரத், மெளலானா மௌலவி ஹாபிழ் ஏ. மஃசூமுல்லாஹ் ஹஜ்ரத், மெளலானா மௌலவி ஏ.ஆர்.ஹுசைன் அஹ்மது மதனி ஹஜ்ரத், மெளலானா மௌலவி ஏ.முஹம்மது முஹ்சீன் ஹஜ்ரத் ஆகியோர் பங்கேற்று பட்டம் பெறும் இளம் ஆலிம்களை வாழ்த்தினர்.


ஜாமிஆவின் கௌரவ தலைவர் ஜெ.அப்துல் ஹமீது, லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஏ. முஹம்மது ஹாரிஸ், துணை தலைவர் ஜெ.அன்வர் சதாத், ஜாமிஆவின் இந்நாள் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர்கள், அனைத்து முத்தவல்லிகள், ஜமாஅத்தார்கள், சங்கைமிக்க உலமாக்கள், பல்வேறு ஊர்களை சார்ந்த பெருமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











Tags: லால்பேட்டை

Share this