Breaking News

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மிஃராஜ் இரவு நிகழ்ச்சி.

நிர்வாகி
0

 


அய்மான் சங்கத்தின் சார்பில் மிஃராஜ் இரவு   நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ரஜப் பிறை 27 ல் மிக சிறப்பாக நடைபெறும் அதே போன்று இந்த வருடமும்  07-02-2023 புதன்கிழமை அன்று மாலை 7:45 மணியளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறப்பான முறையில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாக செயலாளர்  ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் -MAK தொகுத்து வழங்க,  சங்கத்தின் உறுப்பினர் நிஹ்மத்துல்லா அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர், கீழக்கரை H. M.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகித்தார்கள்.


சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி  அவர்கள் வரவேற்பு வழங்கினார்கள் 


பைத்துல்மால் தலைவர் அதிரை அல்ஹாஜ் A. ஷாஹுல் ஹமீது அவர்கள் அய்மான் முன்னுரை வழங்கினார்கள்.


மிஃராஜ் முன்னுரை மௌலானா மௌலவி அப்ழலுல் உலமா M.கலீலுர் ரஹ்மான் ஆலிம் பிலாலி சிறப்புரை வழங்கினார்கள் 


சிறப்புரை: துபாய் சுன்னத் வல் ஜமாத் பேரவை தலைவர், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துபாய் தலைவர் முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூஃப் வழங்கினார்கள்


அய்மான் சங்கத்தின் தலைவர், கீழக்கரை H. M.முஹம்மது ஜமாலுத்தீன்  மற்றும் பைத்துல்மால் தலைவர் அதிரை அல்ஹாஜ் A. ஷாஹுல் ஹமீது  அவர்களும்  முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூஃப் அவர்களுக்கு பொன்னாடை அனுவித்து கௌரவித்தார்கள்.


இச் சிறப்பான நிகழ்ச்சியில்  ஈரோடு ஜமால் முஹம்மது எழுதிய தியாகச்சுடர் திப்பு சுல்தான் என்கின்ற நூல் வெளியிடப்பட்டது.


 கடந்த வாரம் உம்ரா பயணத்தை முடித்து அபுதாபி வந்த விழா குழு உறுப்பினர் காயல் லெப்பை தம்பி அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.


இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் மதுக்கூர் Y. M. அப்துல்லாஹ் நன்றியுரை வழங்கினார்கள்.


நிகழ்ச்சி  துணைத் தலைவர் காதர் மீரான் பைஜீ அவர்களின் துஆவுடன் நிறைவு பெற்றது 


இந்த நிகழ்ச்சியில், அபுதாபி ஜமாத்துல் உலமா சபை, அபுதாபி மௌலித் கமிட்டி, அபுதாபி லால்பேட்டை ஜமாத் ,அமீரக காயிதே மில்லத் பேரவை,   அமைப்புகளின் நிர்வாகிகளும் , துபாயின் சமூக சேவகர் முதுவை ஹிதாயத்,  திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  திண்டுக்கல் ஜமால் முகையதீன்    உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


 நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளர்  லால்பேட்டை A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, சங்கத்தின்  பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா, செயற்குழு உறுப்பினர் திருநெல்வேலி முஹம்மது ஹுசைன்  ,செயற்குழு உறுப்பினர் கீழக்கரை அஜ்மல் தாஹிர், செயற்குழு உறுப்பினர் ராஜபாளையம் இப்ராஹிம், செயற்குழு உறுப்பினர் குத்தாலம் நவ்சாத் அலி, விழா குழு உறுப்பினர் லெப்பை தம்பி உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.






Tags: உலக செய்திகள் சமுதாய செய்திகள்

Share this