லால்பேட்டை அல் - மதினா ஸ்கூல் fruits festival பழங்கள் திருவிழா நடைபெற்றது..!
லால்பேட்டை அல் - மதினா ஸ்கூல் சார்பில் இன்று fruits festival பழங்கள் திருவிழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சண்முகம் அவர்கள் தலைமையில் இன்று காலை (01/02/2024 வியாழக்கிழமை) 10:00 மணியளவில் நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர்கள் *மர்ஹும் முகமது லுக்மான் நினைவு கல்வி அறக்கட்டளை* நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவை, ஐந்தாம் வகுப்பு மாணவன் இறைமறை வசனங்களை ஓதி தொடங்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் வரவேற்புரையாற்றி, நிகழ்வை தொகுத்தளித்தார்.
பள்ளியில் முதல் முறையாக பழங்கள் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது . மாணவர்கள் பழங்களுடைய சத்து அதனுடைய சிறப்பு அம்சம் மற்றும் அதனுடைய தனித்துவத்தை
பற்றிய மாணவர்கள் சிறப்புகளை விளக்கினர்
மாணவர்கள் பழங்கள் வடிவிலான மாறுவேட போட்டி நடைபெற்றது
இறுதியாக அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழங்கள் விருந்து அளித்து சிறந்த பழங்கள் வடிவமைப்பு செய்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
இந்த விழாவினை பொதுமக்களும் சிறப்பு விருந்தினர்களும் பெற்றோர்களும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை