Breaking News

கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் ஏழாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..!

நிர்வாகி
0

 



தோஹா மார்ச் 29, 2024


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் ஏழாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி 29-03-2024 வெள்ளிகிழமை மாலை 4 மணியளவில் தோஹா சல்வா ரோட்டில் உள்ள அல்-யமாமா காம்ப்ளக்ஸ் அரங்கில் கத்தார்  லால்பேட்டை ஜமாஅத்தின் ஏழாம் ஆண்டு  இஃப்தார் நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் 300க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.


விழா நடைபெற்ற அரங்கத்திற்கு மெளலானா மொளலவி ஷம்சுல் மில்லத் K.A முஹம்மது ஜக்கரிய்யா ஹள்ரத்  அவர்களின் பெயரையும், விழா நடைபெற்ற அரங்க நுழைவாயிலுக்கு  மெளலானா மொளலவி ஷேகுல் பிக்ஸ்  S.A அப்துர் ரப் ஹள்ரத்  அவர்களின் பெயரையும், இப்தார் நடைபெற்ற அரங்கிற்கு  மெளலானா மொளலவி ஷேகுல் ஹதீஸ் A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் என மூன்று ஜாமிஆவின் பேராசிரியர்களின் பெயர்களையம் நினைவுகூறும் விதமாக சூட்டப்பட்டிருந்தது.


கத்தார் லால்பேட்டை ஜமாஅத் மூத்த உறுப்பினர்கள்  முஹம்மது மஹ்ரூப், முஸ்தாக் முன்னிலை வகிக்க தலைவர் யக்கீன் அஹமது , செயலாளர் பக்கீர் முஹம்மது, பொருளாளர் நவ்பல்  மற்றும்  நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


நிகழ்ச்சியை முஹம்மது புஹாரி தொகுப்புரையாற்ற,

துவக்கமாக முன்னால் தலைவர் முஹம்மது உஸாமா அவர்களின் மகனார் முஹம்மது ஆதில் அழகு குரலில்  இறைவசனம் ஓத,ஜமாஅத்தின் தலைவர் யக்கீன் அஹமது  அனைவரையும்  வரவேற்க,செயலாளர் முஹம்மது பக்கீர்  முன்பொழிய , தொடர்ந்து ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பாளர் அஹமது ரிலா லால்பேட்டை   ஊரைப்பற்றி மற்றும்  ஜமாஅத்தின் செயல்பாடுகள் திட்ட பணிகள் குறித்தும் பேசினார், ஜமாஅத்தின் முன்னால் தலைவரும் மற்றும்  லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் செயலாளர் முஹம்மது உஸாமா  Lalpet Health Care செய்லபாடுகள் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.


லால்பேட்டையிலிருந்து சிறப்பு விருந்தினராக   மெளலானா, மெளலவி, காரி முஃப்தி ஷைகுல் ஜாமிஆ, நஜ்ருல்மில்லத், அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் (முதல்வர், J.M.A. அரபிக்கல்லூரி, லால்பேட்டை, கடலூர் மாவட்டம் அரசு காஜி)அவர்கள் ரமலானை பற்றியும், ஸதகா, ஜகாத், பித்ரா பற்றி சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள், இதில் அரங்கம் நிறைந்து ஹஜ்ரத் அவர்களின் பயானை கேட்பதற்கு குழுமியிருந்தனர்.


துபாய் ஜமாஅத்தின் 36ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் துபாய் ஜமாஅத் இப்தாரில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரை ஹஜ்ரத் அவர்களின் கரங்களால் ஜமாஅத்தின் நிர்வாகிகளுக்கு மறு வெளியீடு கத்தாரில் வெளியிடப்பட்டது, இதற்கு அரங்கில் நிறைந்திருந்த அனைத்து மக்களின் சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள்,பல்வேறு ஊர் ஜமாஅத் (ஆயங்குடி, பரங்கிப்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை, கடையநல்லூர், இராஜகிரி, வழுத்தூர், அய்யம்பேட்டை, அடியக்கா மங்களம், நாகப்பட்டினம்), மேலும்  கத்தாரில் உள்ள சமுதாய அமைப்புகள் மற்றும்  ஜமாஅத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள்  பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இறுதியாக ஜமாஅத்தின் முன்னால் தலைவர்  முஹம்மது தஸ்லீம் நன்றியுரையாற்ற, ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் நிறைவுபெற்றது.


லால்பேட்டை மண்ணிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை கத்தார் ஸ்கை தமிழ் நிறுவனம் மற்றும் Q Tamil Radio நிறுவனர்கள் கலந்துகொண்டு இணையதளம் மூலம் ஒளிப்பதிவு செய்தனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தார் லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தொடர்ந்து இரண்டாம் அமர்வாக ஜமாஅத்தின் பொதுக்குழு கூட்டம் -புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதில் 2024 -2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தலைவர்  - மசியுல்லாஹ் 

செயலாளர் - புஹாரி 

பொருளாளர் - நவ்பஃல்

துனை தலைவர் - முனாஜுத்தின்


IT - ஹாசிம்

துனை செயலாளர்கள்:-

1) புனியாமீன் 

2) அஸார்

3) அன்வர்

4)  ஷமீம்

5) ஷக்கின்

6) தல்ஹா

7) ரிஜ்வான்

8)நாசர் 


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஜமாஅத்தின்  உறுப்பினர்கள் சார்பில்  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.














Tags: லால்பேட்டை

Share this